×

இடுக்கி மாவட்டத்தில் 10,625 இரட்டை வாக்காளர் நீக்கம்

கூடலூர், மார்ச் 26: இடுக்கி மாவட்டத்தில் இரட்டை வாக்குரிமை உள்ள 10,625 வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி, பீர்மேடு, உடும்பன்சோலை, தேவிகுளம், தொடுபுழா சட்டமன்ற தொகுதிகளில் போலி தொழிலாளர் அட்டை, கூட்டுறவு வங்கி உறுப்பினர் அட்டை மற்ற மாநிலங்களில் உள்ளவர்களின் ஆதார் கார்டு போன்றவைகளின் மூலம் வாக்காளர் பட்டியலில் முறைகேடாக அதிக வாக்காளர்கள் சேர்த்துள்ளதாக கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியினர் மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட கலெக்டர் போன்றவர்களிடம் கொடுத்தனர். மேலும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த ஆண்டு புதிதாகச் சேர்த்த வாக்காளர்கள் அளித்துள்ள ஆதாரங்களை ஆய்வு செய்யவும், போலி ஆவணங்கள் கொடுத்து வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்து உள்ளவர்களை நீக்கவும், இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் கடந்த பிப்.28ம் தேதி வரை உள்ள கணக்கின்படி இடுக்கி மாவட்டத்தில், இரட்டை வாக்குரிமை உள்ள 10,625 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர். இதில் பெரும்பாலானோர் கேரளாவில் ஏலத்தோட்டங்கள் வைத்திருக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதில் தொகுதி வாரியாக விபரம் வருமாறு: தேவிகுளம் தொகுதியில் 4,529 இரட்டை வாக்காளர்களும், இடுக்கியில் 2821 இரட்டை வாக்காளர்களும், தொடுபுழாவில் 1545 இரட்டை வாக்காளர்களும், பீர்மேடு 1291 இரட்டை வாக்காளர்களும், உடும்பன்சோலையில் 439 இரட்டை வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.

Tags : Idukki district ,
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு