தேனி அருகே தொழிலாளி தற்கொலை

தேனி, மார்ச் 26: தேனி அருகே வீரபாண்டியில் மதுப்பழக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி அருகே உ.அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி மகன் பாண்டி(46). இவரது மனைவி ஜெயராணி(40). பாண்டிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதன்காரணமாக இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன்கோயில் பகுதியில் உள்ள மண்டபத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை குறித்து இவரது மனைவி ஜெயராணி அளித்த புகாரின்பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>