கம்பத்தில் இருதய நோய்க்கான மருத்துவமனை திறப்பு

கம்பம், மார்ச் 26: கம்பம் கிராமச்சாவடி தெருவில் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்க்கான புதிய மருத்துவமனை, கம்பம் கார்டியாக் கேர் திறப்புவிழா நடைபெற்றது.இருதயவியல் துறை நிபுணர் டாக்டர் விஜயசாரதி வரவேற்றார். டாக்டர் பழனிச்சாமி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

மருத்துவமனையின் ஒவ்வொரு பிரிவுகளையும் டாக்டர்கள் ஓடையன், சையது சுல்தான் இப்ராஹிம், மணிமோகன், சேதுராமன், ரஹீம், சாமிநாதன், பொன்னரசன், அழகர்சாமி, திலீப்குமார், கோபாலகிருஷ்ணன், மகேஷ்பாண்டியன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், உத்தமபாளையம் டிஎஸ்பி சின்னக்கண்ணு, சின்னமனூர் குமரேசன், லதா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். டாக்டர் பைரவி நன்றி கூறினார்.

Related Stories:

>