×

தேனியில் வாக்காளர் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி

தேனி மார்ச் 26: தேனி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடக்க உள்ளது. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன தேனி மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகளின் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணியை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

இதில் தேனி மாவட்ட பொது தேர்தல் பார்வையாளர்கள் பிரபுத்தான் டேவிட் பிரதான், ரவீந்தர், சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் (செலவினம்) கிலானி பாஷா, டாவா ஷெர்பா, தேனி மாவட்ட போலீஸ் எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Motorcycle Rally ,Theni ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...