பரமக்குடி வாரச்சந்தையில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

பரமக்குடி, மார்ச் 26:  பரமக்குடி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர், நேற்று, நகர் பகுதியில் உள்ள 32,33,2627,28 ஆகிய வார்டுகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ேபசுகையில், ‘‘இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்ததால், நீண்டகாலத் திட்டங்கள் கொண்டு வர முடியவில்லை. ஆகையால், மீண்டும் எனக்கு வாய்ப்பு அளியுங்கள், கட்டாயம் தொழில் நிறுவனங்கள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பரமக்குடி வாரச்சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக சுகாதார வளாகத்துடன் நிரந்தரமான கடைகள் அமைக்கப்படும்’’ எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், நகர செயலாளர் கணேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வின்சென்ட் ராஜா, வேந்தோனி  கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ண மூர்த்தி, நகர நிலவள வங்கி தலைவர் வடிவேல் முருகன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் தினேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணைச் செயலாளர் அம்மா சரவணன், மாவட்ட  இலக்கிய அணி செயலாளர் திலகர், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், பரமக்குடி ஒன்றிய குழு துணைத் தலைவர் சரயு ராஜேந்திரன், கூட்டுறவு வங்கி தலைவர் நாகேந்திரன், நகர அம்மா பேரவை துணை செயலாளர் கார்த்திக், மாவட்ட மாணவர் அணி பொருளாளர் யோக மணிகண்டன், நகர் மகளிரணி திலகவதி உள்ளிட்ட நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Related Stories:

>