×

தொண்டி பகுதியில் அமமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

தொண்டி, மார்ச் 26:  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வ.து.ந.ஆனந்தை ஆதரித்து எஸ்டிபிஐ கட்சி தலைவர் வாக்குகள் சேகரிததார். திருவாடானை சட்டமன்ற தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக வ.து.ந.ஆனந்த் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று தொண்டியில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி வாக்குகள் சேகரித்தார். அவர் பேசுகையில்,பாரதிய  ஜனதா கட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

மேலும் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் வாடும் இஸ்லாமியர்களை மீட்பதாக தேர்தல் அறிக்கையில் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சிறுபான்மையினர் நலன் காக்கும் கட்சியாக அமமுக உள்ளதால் பிரஷர் குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். எஸ்டிபிஐ கட்சி தொண்டி நகர தலைவர் அப்துல் ரகுமான் செயலாளர் நாசர் உட்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து தளக்காவூர் செவ்வாய்ப்பேட்டை கொடுக்கலாம் சிறு நாகுடி ஆயிரவேலி குலநாத்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags : AIADMK ,Tondi ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...