×

காதர்பாட்சா முன்னிலையில் 1,200 பேர் திமுகவில் இணைப்பு

ராமநாதபுரம், மார்ச் 26: ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் நேற்று, நாகாச்சி, என்.மனங்கொண்டான், புதுமடம், மானாங்குடி, நொச்சியூரணி, பிரப்பன்வலசை, இருமேனி, சாத்தக்கோன்வலசை, வேதாளை, மரைக்காயர்பட்டினம், பாம்பன், தங்கச்சிமடம் ஊராட்சிகளில் வாக்கு சேகரித்தார். வாலாந்தரவையில் திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராஜா ஏற்பாட்டில் அதிமுகவைச் சேர்ந்த தர்மா தலைமையில் 700க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். வாலாந்தரவை ஊராட்சியின் அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

நாகாச்சி அம்மன் கோயில் ரோடு முதல் சுகாதார வளாகம் வரை சாலை அமைத்தல், ஆக்கிடாவலசை முனியசாமி கோயிலுக்கு சுற்றுச்சுவர் கட்டிக்கொடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன் என வேட்பாளர் முத்துராமலிங்கம் உறுதி அளித்தார். நாகாச்சி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மண்டபம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் தௌபிக் அலி உடனிருந்தார்.

Tags : DMK ,Kadarpatcha ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...