திருமங்கலம் தொகுதியில் அமைச்சருக்கு ஆதரவாக முதல்வர் பிரசாரம்

திருமங்கலம், மார்ச் 26: திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் உதயகுமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து செக்காணூரணியில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார். அப்போது முதல்வர் பேசுகையில்,

‘அதிமுக வேட்பாளராக போட்டியிடும் உதயகுமார் தொகுதியில் முத்திரை பதித்தவர். கட்சிக்கும் அரசுக்கும் என்றுமே பக்கபலமாக இருந்து வருபவர். கடந்த 5 ஆண்டுகளில் திருமங்கலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளார். புதிய வருவாய் கோட்டம், கல்வி மாவட்டம், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முயற்சி, திருமங்கலம் ரயில்வே மேம்பாலம் அமைக்க பூமிபூஜை, புதிய பஸ்ஸ்டாண்டிற்கு இடம் தேர்வு உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேபோல் எங்கள் ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குடிமராமத்து பணியில் ஆறுகள், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

தேர்தல் அறிக்கையில் கூறியபடி கான்கிரிட் வீடுகள் ஏழை மக்களுக்கு கட்டி தரப்படும், மிக்சி, கிரைண்டர் வழங்கியது போல் வாசிங்மெசின் வழங்கப்படும். 6 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.  வரும் ஏப்ரல் மாத்ததிலிருந்து விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கான கூட்டுறவு சங்ககடன் ரத்து செய்யப்படும். ரேஷன் பொருள்கள் வீடுதேடிவரும். 18 வயது நிரம்பியவர்களுக்கு பயிற்சி அளித்து ஓட்டுனர் உரிமம் எடுத்து தரப்படும்’ என்றார்.

Related Stories:

>