×

மேலூரில் முதல்வருக்காக அழகர்கோவில் சாலை அவசரமாக சீரமைப்பு தேர்தல் அதிகாரியிடம் புகார்

மேலூர், மார்ச் 26: மேலூரில் அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளானை ஆதரித்து நேற்று முதல்வர் எடப்பாடி மேலூர் பஸ்ஸ்டாண்ட் அருகில் பிரசாரம் செய்தார். இதற்காக முதல்வரை வரவேற்று பஸ்ஸ்டாண்டை சுற்றியும் 10க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் விதிமுறையை மீறி அதில் முதல்வர், கூட்டணி கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. இத்துடன் மேலூரில் முதல்வர் பிரசாரத்தை முடித்து கொண்டு அழகர்கோவில் சாலை வழியாக செல்ல வேண்டி இருந்ந்தது. இதற்காக அச்சாலையில் உள்ள குழிகளை மட்டும் சீர்செய்தனர். இதுவும் தேர்தல் விதிமுறை மீறல்தான். மேலூரில் மற்ற பகுதிகள் குண்டும் குழியுமாக கிடக்க, முதல்வர் அச்சாலையை கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக, அதுவும் நள்ளிரவு 1.30 மணியளவில் இச்சாலை சீர்செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வக்கீல்கள் ஸ்டாலின், சேகுவேரா பாண்டியன் ஆகியோர் தேர்தல் அதிகாரி, கலெக்டர், ஆர்டிஓ, தாசில்தார் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர்.

Tags : Algarcoil ,Road Emergency Alignment ,Electoral Officer ,Melur ,
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...