தொழிற்சங்கங்கள் கையெழுத்து இயக்கம்

திண்டுக்கல், மார்ச் 26:திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்ட அளவில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு தொழிற்சங்கங்கள் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் கையெமுத்து இயக்கம் நடைபெற்றது. இதுகுறித்து தமிழ்நாடு தொழிலாளர்கள் உரிமைக்கான கூட்டமைப்பில் செயல்படும் கட்டுமான தொழிலாளர்கள் நல உரிமை சங்க தலைவர் தனமணி கூறியதாவது: அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் கோரிக்கைகளை பொதுமக்கள் முன் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இக்கோரிக்கைகள் முழுக்க முழுக்க அருந்ததியர் பெண் தொழிலாளர்களின் கோரிக்கையாகும். தொழிலாளர்களின் நலன் கருதியே தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது.

இதில் பணி இடங்களில் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் உள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும். தீண்டாமை வன்கொடுமையை தடுக்க வேண்டும், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், ஆணவ படுகொலைகளை தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசியல் கட்சிக்கே எங்கள் வாக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories:

More
>