ஷீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் துவக்கம்

திண்டுக்கல் மார்ச் 26: திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரம் ஷீரடி சாய்பாபா கோயிலில் வருகின்ற 28ம் தேதி பங்குனி உத்திரம் அன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா நேற்று முதல்கால யாக பூஜையான கணபதி கோமத்துடன் துவங்கியது. இதனை தொடந்து மாலை ஷீரடியில் எடுக்கப்பட்ட பல்லாக்கு கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை சாய் பாபா வரலாறு குறித்த திரைப்படமும், நாளை மாலை கோவை நாகசாயி பஜன்ஸ் குழுவினரின் பஜனை பாடல்களும் இடம் பெறும். ஞாயிற்றுக்கிழமை ஆறாம்கால யாக பூஜை பூர்ணாகுதி நிறைவு பெற்று கலசத்திற்கு புனித நீர் குடை யாத்திரையுடன் கலசம் விமானம் சென்று மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். இவ்விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Related Stories:

More