மேற்கு தொகுதி மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தர நடவடிக்கை

திருச்சி, மார்ச் 25: திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு நேற்று 45, 45வது ஆ வார்டு கருமண்டபம் பகுதியில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:5 ஆண்டுகளாக போராடி மக்களுக்கு செய்ததைவிட வரும் நாளில் வெற்றி பெற்று அனைத்து மக்களுக்கும் அனைத்து வசதிகளையும் செய்துதர நடவடிக்கை எடுப்பேன். மே 3ம் தேதி திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக அமர்வது உறுதி. திமுக ஆட்சி அமைந்ததும் கருமண்டபம் பகுதி மக்களுக்கு சாலை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து சீரான குடிநீர் வசதி செய்யப்படும் என்றார். மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, பகுதி செயலாளர் மோகன்தாஸ், வட்ட செயலாளர் பாலு, பிஆர் பாலசுப்ரமணியன், ராமதாஸ், புஷ்பராஜ், கருமண்டபம் சுரேஷ், பரமசிவம், பாண்டுரங்கன், கருத்து கதிரேசன் பங்கேற்றனர். இதைதொடர்ந்து கருமண்டபம், பொன்னகர், இளங்காட்டு மாரியம்மன் கோவில், செல்வநகர், சக்திநகர், மாந்தோப்பு, தீரன்நகர், சோழநகர், விவிவி தியேட்டர், மிளகுபாறை, கோரிமேடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related Stories:

>