×

மண்ணச்சநல்லூரில் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரசாரம்

மண்ணச்சநல்லூர், மார்ச் 25: மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதியை ஆதரித்து நடிகை விந்தியா, சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூரில் பிரசாரம் செய்தார். அப்போது விந்தியா பேசியதாவது: பொதுமக்கள் 24 மணி நேரமும் எளிதாக அணுகக்கூடிய வேட்பாளர் பரஞ்சோதி. அவர் கட்சிக்கு கடுமையாக உழைத்து இந்த இடத்துக்கு வந்துள்ளார். திருச்சி மலைக்கோட்டை மக்கள், காவிரி ஆற்றை போல பரந்த மனம் கொண்டவர்கள். அடிமட்ட தொண்டனும் அதிமுகவில் உயர்ந்த பதவியான முதல்வர் சீட்டை அலங்கரிக்க முடியும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு அதிமுக அரசு. அதிமுக அரசு சொல்வதை செய்யும். மக்கள் நன்மைக்காக சொல்லாததையும் செய்யும். எனவே அதிமுகவுக்கு வாக்களியுங்கள். நிம்மதியான ஆட்சியை பெறுங்கள் என்றார். அப்போது வேட்பாளர் பரஞ்ஜோதி, மாவட்ட துணை செயலாளர் சின்னையன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயகுமார், ஆதாளி மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Tags : Vindhya ,AIADMK ,Paranjothi ,Mannachanallur ,
× RELATED பொய் வாக்குறுதி தரும் பாஜவையும்...