முத்துப்பேட்டை அருகே வீடு புகுந்து ரூ.3 லட்சம் நகை, பணம் கொள்ளை

முத்துப்பேட்டை, மார்ச் 25: முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரகாசம். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பிரகாசம் தனது மனைவி சசிகலா மற்றும் குழந்தைகளுடன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது இவரது வீட்டின் பின்புறம் கதவை உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் செயின், மூன்றரை பவுன் தங்க நெக்லஸ் என மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து பிரகாசம் மனைவி சசிகலா முத்துப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் எஸ்ஐ., திருக்குமரன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Related Stories:

>