×

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்பேன் திமுக வேட்பாளர் அசோக்குமார் வாக்குறுதி

சேதுபாவாசத்திரம், மார்ச் 25: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அசோக்குமாருக்கு, அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் நேரில் சந்தித்து ஆதரவு அளித்தனர். அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சிவசங்கர், கிள்ளிவளவன், முத்துராமலிங்கம், நீலகண்டன், ராணி, அன்னலட்சுமி உள்ளிட்ட 60 பேர், திமுக வேட்பாளர் என்.அசோக்குமாரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், “அரசுப் பள்ளிகளில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பகுதி நேர ஆசிரியர்கள் கணினி, ஓவியம், விளையாட்டு, வாழ்வியல் திறன் உள்ளிட்ட துறைகளில் தற்காலிகமாகப் பணியாற்றி வருகிறோம். திமுக தனது தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்ததும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என அறிவித்துள்ளது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றி எங்கள் வாழ்வாதாரம் காத்திட வேண்டும். அதனை வரவேற்று தமிழகம் முழுவதும் எங்கள் கூட்டமைப்பு சார்பில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்வோம்” எனக் கூறப்பட்டிருந்தது.

மனுவைப் பெற்றுக் கொண்ட திமுக வேட்பாளர் என்.அசோக்குமார் தான் வெற்றி பெற்றதும், சட்டமன்றத்தில் இதுகுறித்து குரல் எழுப்பி, பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்பேன்’’ என உறுதியளித்தார். பேராவூரணி தொகுதி மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய தலைவர் வின்சென்ட் ஜெயராஜ் வேட்பாளர் அசோக்குமாரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினார். கோரிக்கைகளை கேட்ட வேட்பாளர் அசோக்குமார் தாம் வெற்றி பெற்றால் சட்டமன்றத்தில் குரல் கொடுத்து மாற்றுத்திறனாளிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags : DMK ,Ashok Kumar ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி