பணிக்கு கூடுதலாக ஆட்கள் நியமனம் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பில் முடிவு

புதுக்கோட்டை, மார்ச் 25: திருவரங்குளம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிதண்ணீர் இயக்குபவர்கள் பணிக்கு கூடுதல் ஆட்கள் பணி நியமனம் செய்ய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 48 ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஊராட்சி தலைவர்களுக்கு காசோலை வரவு செலவு செய்திட அனுமதி வழங்கிடவும், ஊராட்சி தலைவர்களுக்கு மாதம்தோறும் பராமரிப்பு செலவிற்காக ஒரு லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திடவும், ஊராட்சி தலைவர்களுக்கு அண்டை மாநிலங்களில் வழங்கப்படுவதுபோல் பயணப்படி ரூபாய் 25 ஆயிரம் வழங்கிட வேண்டும். ஊராட்சிகளுக்கு குடிதண்ணீர் இயக்குபவர்கள் பணிக்கு கூடுதலாக ஆட்கள் நியமனம் செய்திடவும், ஊராட்சிகளுக்கு தனியாக எலக்ட்ரீசியன் தற்காலிக பணியாளர் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 15 பேர் கொண் ஊராட்சி கூட்டமைப்பு கமிட்டி அமைக்கப்பட்டது.

Related Stories:

>