×

சசிகலாவை சந்திப்பதை யாராலும் தடுக்க முடியாது ரத்தினசபாபதி எம்எல்ஏ போர்க்கொடி

புதுக்கோட்டை, மார்ச் 25: அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்னை 9 ஆண்டுகள் மாவட்டப் பொருளாளராகவும், 14 ஆண்டுகள் அவைத் தலைவராகவும் பொறுப்பு அளித்திருந்தார். மனநிறைவுடன் பணியாற்றினேன். இப்போது எனக்கு தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போதைய அரசியல் சூழலில் மனதுக்கு சங்கடமாக இப்பொறுப்பில் பயணிக்க முடியாது என்பதால் ராஜிநாமா செய்கிறேன். வெறுமனே பணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற முடியாது. இத்தேர்தலில் அமமுக ஒவ்வொரு தொகுதியிலும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாக்குகள் வரை பிரிக்கப் போகிறார்கள். இந்த இயக்கம் பிரிந்திருப்பது நல்லதல்ல. இத்தேர்தலில் பின்னடைவு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

திமுக அணியிலிருந்து விலகி மக்கள் நலக் கூட்டணி அமைத்தவர்கள் தற்போது மீண்டும் திமுக அணியில் இணைந்துள்ளார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். சசிகலா தற்போது ஓய்வில் இருக்கிறார். அவரை நான் சந்திப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சந்திப்பேன். அமமுக மாற்று கட்சியல்ல. அவர்கள் நியமித்துதான் இந்த அமைச்சரவையே உருவானது. கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருக்கிறார்கள். இரு இயக்கத்தையும் இணைக்க முயற்சிப்பேன். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிப்போரை அகற்றவும் முயற்சிப்பேன். கட்சியில் களைகளாக இருப்போதையும் அகற்ற முயற்சிப்பேன். பிரிந்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியாது என்றார்.

Tags : Sasikala ,Rathinasabapathy ,
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!