×

புதுக்கோட்டை மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.5.93 கோடி பொருட்கள் பறிமுதல்

புதுக்கோட்டை, மார்ச்.25: புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை தங்கம் மதுபானங்கள் உள்ளிட்ட ரூ.5 கோடியே 93 லட்சத்து 79 ஆயிரத்து 635 மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து அந்தெந்த தேர்தல் செய்து தேர்தல் பறக்கும் படைகள் நடடிக்கை எடுத்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வர தொடங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் பறக்கும்படைகள், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்படும் பணங்கள், நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து அவர்கள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை கிராமம் கிராமமாக எடுத்து செல்கின்றனர். வேட்பு மனுக்கள் முடிந்ததால் தேர்தல் ஆணையம் மனுக்களை பரீசிலனை செய்து வருகிறது.

இதனால் தேர்தல் அலுவலகங்கள் பரபரப்பு காண முடிகிறது. இன்னும் பிரசாரத்தில் சுமார் 11 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரும் தங்கள், மதுபான பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகிறனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, விராலிமலை, திருமயம், அறந்தாங்கி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 96, ஆயிரத்து 240 மதிப்பிலான மருந்து பொருட்களும், ரூ.20 ஆயிரத்து 250 மதிப்பிலான வெடிபொருட்களும், ரூ.5கோடியே 91 லட்சத்து 15 ஆயிரத்து 098 மதிப்பிலான தங்க நகைகளும், ரூ.71 ஆயிரத்து 275 மதிப்பிலான மதுபாட்டில்களும், ரூ.75 ஆயிரத்து 972 மதிப்பிலான சேலை மற்றும் ரேஷன் பொருட்கள் என மொத்தம் ரூ. 5 கோடியே 93 லட்சத்து 79 ஆயிரத்து 635 மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து அந்தெந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர். பொருட்களின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்பிக்கும் பொருட்டு மீண்டும் பொருட்களை ஒப்படைப்பார்கள் என்று தேர்தல் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Pudukkottai district ,
× RELATED மதுபிரியர்கள் மகிழ்ச்சி...