வன்னியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மேலும் 2 வழக்கு

மதுரை, மார்ச் 25: வன்னியர் சமூகத்திற்கான உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மேலும் இரு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. அவை, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் ெசய்யப்பட்ட இரு மனுக்கள் ஏற்கனவே சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை அருண் பிரசாத் மற்றும் தூத்துக்குடி பிரேசில் ஆகியோர் தரப்பில் மேலும் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், இந்த மனுக்களையும் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

Related Stories: