சீர்காழி நகராட்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பாரதி தீவிர வாக்குசேகரிப்பு

சீர்காழி, மார்ச் 25: சீர்காழி தொகுதி அதிமுக வேட்பாளர் பாரதி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புளிச்சகாடு, ஈசானிய தெரு, கோவிலான்தெரு, கீழதென்பாதி, பிடாரி தெற்கு வீதி, பிடாரி வடக்கு வீதி, மேல மாரியம்மன் கோயில் தெரு, தேர் வடக்கு வீதி, தேர் தெற்கு வீதி, வாய்க்காங்கரை தெரு, திருக்கோலக்கா தெரு, புழுகாப்பேட்டை தெரு, ரயில்வே ரோடு, தென்பாதி திட்டை ரோடு, பனமங்கலம் ஆகிய பகுதிகளில் சீர்காழி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பாரதி திறந்த ஜீப்பில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வெடி வெடித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வேட்பாளர் பாரதி பேசுகையில், சீர்காழி அடுத்த எடமணல் கிராமத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்பேரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு ரூ.58 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில் சீர்காழி பகுதியில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் சேதமடையாமல் பாதுகாப்பாக வைக்க முடியும் என்றார்.

அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ராஜமாணிக்கம், சந்திரசேகரன், நகர செயலாளர் பக்கிரிசாமி, நகர அம்மா பேரவை செயலாளர் ஏவி மணி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் வினோத், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி துணை செயலாளர் பரணிதரன், மாவட்ட இணை செயலாளர் ரமாமணி, மாவட்ட பிரதிநிதிகள் கார்த்திக் லட்சுமி, கூட்டுறவு சங்க இயக்குனர் ரவி சண்முகம், வழக்கறிஞர் நெடுஞ்செழியன், பாமக மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், தொகுதி அமைப்புச் செயலாளர் கண்ணன், மாவட்ட துணைை செயலாளர் வேல்முருகன், நகர செயலாளர் சின்னையன், மாவட்ட மாணவர் சங்க தலைவர் ராஜேஷ், பாஜக நகர தலைவர் அருணாச்சலம் மற்றும் பாமக பாஜக தமாகா மூமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories:

>