×

அரவக்குறிச்சி பகுதியில் வெங்காயம் கிலோ ரூ.30க்கு விற்பனை

அரவக்குறிச்சி, மார்ச் 25: அரவக்குறிச்சி பகுதியில்கிலோ ரூ 100 க்கு விற்கப்பட்ட வெங்காயம் விலை குறைந்து கிலோ ரூ 30 க்கு விற்பனையாகின்றது. நடுத்தர வர்க்க இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சென்ற மாதத்தில்மழை தாக்கத்தால் வரத்து குறைந்து வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் இரண்டு மடங்கு விலை அதிகரித்து கிலோ ரூ. 100 க்கு விற்கப்பட்டது. அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம்., கரூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள காய்கறி மொத்த மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்து சில்லறை விற்பனையில் விற்கப்படுகின்றது.இது தொடர்பாக காய்கறி சில்லறை வியாபாரி ஒருவர் கூறியதாவது,திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கரூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள காய்கறி மொத்த மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்து சில்லறையில் விற்கப்படுகின்றது.கடந்த மாதங்களில் பெய்த மழை தாக்கத்தில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வெம்பி கெட்டுப் போகின்றன. இதனால் இதனை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரவில்லை. இதனால் காய்கறி மொத்த மார்க்கெட்டு களுக்கே விவசாயிகளிடமிருந்து காய்கறி வரத்து குறைவாக இருந்தது.

இதில் வெங்காயம் அதிக பட்சமாக. ரூ. 100 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டது.பரவலாக அனைத்து காய்கறிகளுமே மொத்த விலை மூன்று மடங்கு விலை அதிகரித்தது. இதனால்சில்லறை விலையும் அதிகரித்தது .தற்போது வெளி மாநிலங்களிலிருந்து வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் வருவதால்  விலை குறைந்து தற்போது ரூ. 30க்கு விற்பனையாகின்றது. என்றார். . இதே போல கடந்த ஒரு மாதமாக வெங்காயம் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் இரண்டு மடங்கு விலை அதிகரித்திருந்தது.தற்போது பீன்ஸ்,அவரக்காய், கத்தரிக்காய், முட்டைகோஸ், பச்சை மிளகாய் என சமையலுக்கு அத்தியாவசியமாக தேவைப் படும் அனைத்து காய்கறிகளும் கணிசமாக அளவு விலை குறைந்து விற்பனையாகின்றது.இதனால் அரவக்குறிச்சி பகுதியில் கிலோ ரூ 100 க்கு விற்கப்பட்ட வெங்காயம் விலை குறைந்து தற்போது கிலோ ரூ 30 க்கு விற்பனையாகின்றது. இதனால் நடுத்தர வர்க்க இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Aravakurichi ,
× RELATED வாக்குப்பதிவு முடிந்து விட்டதால்...