×

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோயில் விழாக்கள் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு மாற்றம்

கரூர், மார்ச் 25: சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் முக்கிய கோயில் விழாக்கள் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு மாற்றி வைக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ம்தேதி நடைபெறுகிறது.இந்த காலக்கட்டத்தில் தாந்தோணிமலை போன்ற சில பகுதிகளில் ஆண்டுதோறும் வழக்கமாக கோயில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. முக்கிய கோயில் விழாக்கள் அதிகபட்சமாக இரண்டு வாரங்கள் வரை நடத்தப்படும். இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை போன்ற முக்கிய நிகழ்வுகளும், தொடர்ச்சியாக பிரசார நிகழ்வுகளும் நடைபெற்று வருவதால் இந்த மாதங்களில் நடத்தப்பட வேண்டிய கோயில் விழாக்கள் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு நடத்திக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Assembly elections ,
× RELATED `சக்தி திட்டத்தால் தான் நான் சட்டம்...