×

நீலகிரியில் மூன்று தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு

ஊட்டி, மார்ச் 25:நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களை சுழற்சி முறையில் 3 தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணிகள் இரண்டாம் கட்டமாக நேற்று நடந்தது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள், துணை வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே, சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்து அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைத்து வாக்கு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன.  ஒரு வாக்குச்சாவடிக்கு 4 அலுவலர்கள் என்ற விகிதத்தில் 3472 அலுவலர்கள் மற்றும் கூடுதலாக 20 சதவீதம் என 696 வாக்குச்சாவடி அலுவலர் என மொத்தம் 4168 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளார்கள். சுழற்சி முறையில் வாக்குச்சாவடி அலுவலர்களை 3 ெதாகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே, முதற்கட்டமாக கடந்த 10ம் தேதி சுழற்சி முறையில் பணியாளர்கள் தேர்வு நடந்து. நேற்று இரண்டாம் கட்டமாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் இப்பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

Tags : Nilgiris ,
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்