×

861 பதற்றமான வாக்குச்சாவடிகளில் விரைவில் கேமிரா பொருத்தும் பணி அதிகாரிகள் தகவல்

கோவை, மார்ச் 25: கோவை மாவட்டத்தில் 861 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா பொருத்தும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1,085 மையங்களில்  4,427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இதில் மேட்டுப்பாளையம்  தொகுதியில் 51 வாக்குச்சாவடிகளும், சூலூர் தொகுதியில் 52  வாக்குச்சாவடிகளும், கவுண்டம்பாளையம் தொகுதியில் 153 வாக்குச்சாவடிகளும்,  கோவை வடக்கில் 153 வாக்குச்சாவடிகளும், தொண்டாமுத்தூர் தொகுதியில் 137  வாக்குச்சாவடிகளும், கோவை தெற்கில் 125 வாக்குச்சாவடிகளும், சிங்காநல்லூர்  தொகுதியில் 91 வாக்குச்சாவடிகள், கிணத்துக்கடவு தொகுதியில் 59  வாக்குச்சாவடிகளும், பொள்ளாச்சி தொகுதியில் 28 வாக்குச்சாவடிகளும்,  வால்பாறை தொகுதியில் 12 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 861 வாக்குச்சாவடிகள்  பதற்றமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதற்றமான  வாக்குச்சாவடிகளில்   வெப் கேமரா பொருத்தும் பணிகள்  விரைவில் துவங்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வாக்குச்சாவடி மையத்திற்கு ஒர் வீல் சேர் விதம் 1085 வீல்  சேர்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 1100 வீல்சேர்கள் கோவைக்கு  வந்துள்ளன. இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள்  கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் 1085 வையங்களில் 4427 வாக்குச்சாவடிகள்  அமைக்கப்பட உள்ளன. இதில் வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள்,  முதியோர்களுக்கு உதவ வீல்சேர்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  இதற்காக  கோவைக்கு 1100 வீல் சேர்கள் வந்துள்ளன. இந்த வீல் சேர்கள் விரைவில்  வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் முடிந்த பின்  வீல்சேர் கேட்டு விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இது  வழங்கப்படும்,’’ என்றனர்.

Tags :
× RELATED கோவையில் இன்று வைகோ பிரசாரம்