×

திருப்போரூர் போரூராட்சியில் சாலையின் நடுவே பாதாள சாக்கடை தொட்டிகள்

திருப்போரூர், மார்ச் 25: திருப்போரூர் போரூராட்சி பகுதியில் சாலையின் நடுவே பாதாள சாக்கடை கான்கிரீட் தொட்டிகள் அகற்றாமல் உள்ளன. இதனால், பொதுமக்கள் விபத்து பீதியுடன் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் நான்கு மாடவீதிகள், பழைய மாமல்லபுரம் சாலை, சான்றோர் வீதி, கச்சேரி சந்து தெரு, வணிகர் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான குழாய்கள் புதைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இன்னும் 60 சதவீத பணிகள் உள்ளன. பல்வேறு தெருக்களில் குழாய்கள் புதைக்கும் பணி மற்றும் குழாய்களுக்கு நடுவே கான்கிரீட் தொட்டி அமைக்கும் பணி நடைபெறவில்லை.

மீதம் உள்ள இந்த பணிகளை செய்வதற்காக திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு சாலையில், அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே பேருந்து நிறுத்தத்தை ஒட்டி கான்கிரீட் தொட்டிகள் செய்யப்பட்டு சாலையின் பாதியை அடைத்து கொண்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக, அகற்றப்படாமல், அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமின்றி, பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பொதுமக்களும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, இந்த பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தும் கழிவுநீரகற்று  வாரிய ஒப்பந்ததாரர்கள் பள்ளி எதிரே சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தொட்டிகளை அகற்றி, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Thiruporur ,
× RELATED செங்கை கலெக்டர் துவக்கி வைத்தார்;...