அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் மரகதம் குமரவேல் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுராந்தகம், மார்ச் 25: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தின், கிராமப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள, பெரும்பேர் கண்டிகை, கடமலைபுத்துர், தொழுப்பேடு, ஆத்தூர், சமத்துவபுரம், வெளியம்பாக்கம், கரசங்கால், நெடுங்கால், அல்லூர், கொளத்தூர், முருங்கை, அனந்தமங்கலம், சிறுவங்குணம், மேட்டுப்பாளையம், விண்ணம்பூண்டி, ஏம்பலம், வடமணிபாக்கம், எட்டிப்பட்டு, வேப்பங்கரணை லட்சுமிபுரம், ஓரத்தி உள்பட பல்வேறு கிராமங்களில் திறந்த வேனில் சென்றும்,  சில கிராமங்களில் நடந்து சென்றும், சில பகுதிகளில் வயல் வெளிகளுக்கு சென்று அங்கு பணிபுரிபவர்களிடமும் வாக்கு சேகரித்தார்.

அப்போது, மரகதகம் குமரவேல் பேசுகையில், முழுக்க முழுக்க விவசாய கிராமங்களை உள்ளடக்கிய இப்பகுதியில் தேவைப்படும் இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தினமும்  ரயில்கள் மூலம் சென்னைக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். அவர்களின் வசதிக்காக சென்னை - புதுச்சேரி, சென்னை - விழுப்புரம் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்தபிறகு நடவடிக்கை எடுப்பேன். மேலும், கிராமப்பகுதிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு, அரசு சார்பில் இலவச வீட்டு மனை பெற்றுத்தர தீவிர நடவடிக்கை மேற்கொள்வேன்’ என்றார். அப்போது, மாவட்ட அதிமுக செயலாளர்  திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் அனந்தமங்கலம்  சுப்பிரமணியம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன், ராமமூர்த்தி, பாமக  மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன், மாவட்ட செயலாளர் ஆத்தூர்  வ.கோபாலகண்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் குமரவேல், கட்சி  நிர்வாகிகள் ஏ.ஜி.குணசேகரன், ஆதிகேசவன், பசுமைத்தாயகம் அமைப்பின் நிர்வாகி  சந்திரசேகர் மற்றும் பாஜ, தமாகா, புரட்சி பாரதம் உள்பட கூட்டணி  கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>