×

முன்விரோத தகராறில் பிரபல ரவுடி கொலை: பாசக்கார நண்பர்கள் 2 பேர் கைது

காஞ்சிபுரம், மார்ச் 25: காஞ்சிபுரத்தில் முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 2 பேரை, போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த தாயார்குளம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சூளை கருப்பு (எ) வடிவேல் (35). கொத்தனார் வேலை செய்து வந்தார். பிரபல ரவுடி. இவர் மீது சிவகாஞ்சி உள்பட பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது மனைவி செண்பகம் (29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, செண்பகம் பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து, தனியாக வசித்து வந்த வடிவேலு, அடிக்கடி மது அருந்திவிட்டு அப்பகுதி மக்களிடையே தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருந்தபோது, வழிப்பறிக் கொள்ளையர்களான காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த செல்வம், சதீஷ் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது. சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த பிறகும், அவர்களுடன் நட்பு நீடித்துள்ளது. ஆனால், கடந்தாண்டு செல்வம் மற்றும் வடிவேலு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் எம்ஜிஆர் நகரில் உள்ள விநாயகர் கோயில் வளாகத்தில் வடிவேல் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வம், சதிஷ் ஆகியோர் அவரிடம் தகராறு செய்தனர். இதில், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், கத்தி எடுத்து தலையின் பின்புறத்தில் செல்வம் பலமாக வெட்டினார். வடிவேலு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடிவந்தனா். அதற்குள், 2 பேரும் தப்பிவிட்டனர். தகவலறிந்து சிவகாஞ்சி போலீசார் சம்பவ இத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த செல்வம், சதீஷ் ஆகியோரை நேற்று காலை சுற்றி வைளத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செல்வம், சதீஷ் மீது 3க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம்...