×

ஆரணி ஆற்றில் தடுப்பணை கட்டப்படும்: திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் உறுதி

ஊத்துக்கோட்டை, மார்ச் 25: பூண்டி கிழக்கு  ஒன்றியத்தில் கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், ஆரணி ஆற்றில் தேவையான இடங்களில் தடுப்பணை கட்டப்படும் என வாக்குறுதி அளித்தார்.  திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளருமான  டி.ஜெ.கோவிந்தராஜன் நேற்று பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள கச்சூர், கலவை,  போந்தவாக்கம், நந்திமங்கலம், மேலக்கரமனூர், அனந்தேரி, பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், வேலகாபுரம், கெருகம்பாக்கம், மாமண்டூர், மெய்யூர், தேவந்தவாக்கம், மயிலாப்பூர், ஒதப்பை, கொரக்கண் தண்டலம்  ஆகிய ஊராட்சிகளில் திறந்த ஜீப்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, டி.ஜெ.கோவிந்தராஜன் பேசும்போது, ‘போந்தவாக்கம் கிராமத்தில் இளைஞர்களுக்கு உடற்பயிற்சி மையம் அமைத்து தரப்படும், கிருஷ்ணா கால்வாய் குறுக்கே சிறு பாலம் கட்ட ஏற்பாடு செய்யப்படும், ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் 4 வழிச்சாலையாக அமைக்க ஏற்பாடு செய்கிறேன். பூண்டி ஒன்றியத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும். ஆரணியாற்றில் ஆங்காங்கே தடுப்பணை கட்டப்படும்’   என கூறினார்.  முன்னதாக, வழிநெடுகிலும் பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், தேங்காய், பூசணிக்காய் உடைத்தும், பட்டாசு வெடித்தும்  வரவேற்றனர்.

இதில், பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர் தலைமையில்  முன்னாள் எம்எல்ஏ இஏபி.சிவாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, கே.வி.லோகேஷ், பூண்டி ஒன்றிய குழு துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால், ஊத்துக்கோட்டை ராதாகிருஷ்ணன், குமரவேல், பொறுப்பு குழு உறுப்பினர்கள்  சிவய்யா, யோவான், பிரதாப், சித்ரா பாபு, ஸ்ரீராம், பாபு, குப்பன், விஸ்வநாதன், செல்வம் மற்றும் பூண்டி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தில்லை குமார், மாவட்ட கவுன்சிலர் சுதாகர், ஒன்றிய கவுன்சிலர்கள்  குமார், தேன்மொழி ஏழுமலை, ஊத்துக்கோட்டை நீதிமன்ற அமைப்பாளர் வக்கீல் வெஸ்லி, துணை அமைப்பாளர் வக்கீல் சோமசுந்தரம், நெல்வாய் ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி பொன்னுசாமி, அரியத்தூர் ஊராட்சி தலைவர் சசிகலா பாலசுப்பிரமணி, சக்ரவர்த்தி,  சீத்தஞ்சேரி பிரபாகரன், விஜயன், யுகேந்தர், தொண்டரணி டார்லிங் ராஜா, பால் சுதாகர், உதயகுமார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஏஜி.சிதம்பரம், வக்கீல் இமாலயா அருண்பிரசாத், லோகநாதன், கோவிந்தசாமி, விசிக நீலவானத்து நிலவன்,  ராள்ளை பாபு, தொண்டன் பஞ்சா, தமிழ் செல்வன், வெங்கல் மணி,  தியாகு, கதிர், கம்யூனிஸ்ட் முருகன், முரளி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.  மேலும், மேலக்கரமனூர் மற்றும் அவிச்சேரி கிராமங்களில் இருந்து  அதிமுக  உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள்  கேசவன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Tags : DMK ,DJ Govindarajan ,Arani river ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே காங்....