×

வெள்ளவேட்டில் புதிய பேருந்து நிலையம் அமைத்து தருவேன்: பூந்தமல்லி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி வாக்குறுதி

திருவள்ளூர், மார்ச் 25: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி பூந்தமல்லி ஒன்றியத்தில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு துணை பெருந்தலைவருமான டி.தேசிங்கு தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது, எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குத்தம்பாக்கம், வெள்ளவேடு, கொத்தியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் புதிய பள்ளி கட்டிடமும், வெள்ளவேடு ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடமும், கொத்தியம்பக்கத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடமும், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடமும், பள்ளி கட்டிடமும் கட்டி தந்துள்ளேன். கூடப்பாக்கத்தில் ஒரு கோடி 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமென்ட் சாலையும், கொசவம்பாளையம் அருந்ததியர் காலனியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலையும்,  கொட்டாமேட்டில் பேவர் பிளாக் சாலையும் அமைத்து கொடுத்துள்ளேன்.

 மேலும் பல்வேறு கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையமும், ஆள்துளை கிணறும், தார் சாலை வசதியும் அமைத்து கொடுத்துள்ளேன். மீண்டும் எனக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும், மேல்மனம் பேட்டில் புதிய பள்ளிக்கட்டிடமும், வெள்ளவேட்டில் பேருந்து நிலையமும் அமைத்து தருவேன். நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவு படுத்தி நவீன மருத்துவமனையாக மாற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன். ஆண்டர்சன் பேட்டையில் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களுக்கும், கூடப்பாக்கம் கலெக்டர் நகரில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வேன். தமிழகத்தில் உதய சூரியன் உதயமாகட்டும்,  தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்திற்கு விடிவுகாலம் கிடைக்கட்டும். எனவே நீங்கள் அனைவரும் உதயசூரியன சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் இவ்வாறு அவர் பேசினார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது காங்கிரஸ் வட்டாரத் தலைவர்கள் ராஜன், சேகர், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் முனியன், தட்சிணாமூர்த்தி, மாவீரன், ஒன்றிய குழு துணை தலைவர் க.பரமேஷ்வரிகந்தன், வக்கீல் என்.பி.மாரிமுத்து, வை.முனிவேல், திமுக ஒன்றிய நிர்வாகிகள் இ.கந்தபாபு, வி.சுமதிவிஜயகுமார், கு.ச.கதிரவன்,  பா.கந்தன், கட்டதொட்டி எம்.குணாசேகரன், ஜிசிசி.கருணாநிதி, கே.கோபிநாத், ஜெ.சாக்ரடிஷ், பரணிதரன், நேமம் ரமேஷ், இவிபி.பிரதீப், ஜி.பிரவின்குமார், மு.தே.ராஜேஷ், டி..சகயாம், மேல்மணம்பேடு சுகுமார், சர்மன்ராஜ், மற்றும் ஊராட்சி  நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Tags : Wellavettu ,Poonamallee ,DMK ,A. Krishnasamy ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...