திமுக ஆட்சி அமைந்ததும் கூளூர் அருகே குசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டித்தரப்படும்: திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் வாக்குறுதி

திருவள்ளூர், மார்ச் 25: திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் திருவாலங்காடு ஒன்றியத்தில் மேற்கு ஒன்றிய திமுக  செயலாளர் கூளூர் எம்.ராஜேந்திரன் தலைமையில் கொளுத்தும் வெயிலிலும் கிராமம், கிராமமாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் திரண்டு வந்து ஆரத்தி எடுத்தும், வெற்றி திலகம் இட்டும் திருஷ்டி பூசணிக்காய் உடைத்தும், சூரத் தேங்காய் உடைத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  அப்போது அவர் பேசும்போது, திருவலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சாலை வசதி ஏற்படுத்தி தந்துள்ளேன், பள்ளி கட்டிடம், ஆழ்துளைக்கிணறுகள், சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றை அமைத்து தந்துள்ளேன். திமுக ஆட்சி அமைந்ததும், தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்.   

கண்டிப்பாக கூளூர் அருகே நிலத்தடி நீரை பாதுகாக்க குசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டித் தரப்படும். இலுப்பூர் ஏரி புறம்போக்கில் வசித்து வரும் இருளர் காலனி மக்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து இலவச வீட்டுமனை வழங்கி தொகுப்பு வீடு கட்டித்தரப்படும். கனகம்மாசத்திரம் குளக்கரையில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து இலவச வீட்டு மனைை வழங்கி தொகுப்பு வீடு கட்டித் தரவும் நடவடிக்கைை எடுக்கப்படும்.

 அருங்குளம் கிராமத்திற்கு சரியான பஸ் வசதி இல்லாததால், பொதுமக்களின் நலன் கருதி அடிக்கடி வந்து செல்லும் அளவிற்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும். மேலும் விவசாயத்திற்கு மும்முனை இலவச மின்சாரம் வழங்கப்படும். எனவே நீங்கள் அனைவரும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வைக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்தவாக்கு சேகரிப்பின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், பெஞ்சமின், ஜெ.இளங்கோவன், சந்திரன், கோபி, விசிக நிர்வாகி எஸ் .பன்னீர்செல்வம், ஞானப்பிரகாசம், எஸ்.கேகுமார், புகழேந்தி, மதிமுக நிர்வாகிகள் ஏழுமலை, கோவர்தனம், பாலரகுபதி, திமுக  ஒன்றிய நிர்வாகிகள் சாந்தி எம்ரோஸ், லோகநாதன், குமரவேலன், பஞ்சாட்சரம், மாவட்ட கவுன்சிலர் காஞ்சிப்பாடி விஜயகுமாரி சரவணன், இளைஞரணி நிர்வாகிகள் காஞ்சிப்பாடி யுவராஜ், பி.ஆர்.பாபு, ஜி.பாபு, என்.அம்பேத், திலகன் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

Related Stories: