ராஜபாளையம் ஒன்றிய பகுதியில் நெசவுத்தொழிலை பாதுகாக்க நடவடிக்கை ராஜவர்மன் எம்எல்ஏ வாக்குறுதி

சாத்தூர், மார்ச் 25: ராஜபாளையம் ஒன்றிய பகுதியில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் நெசவு தொழில் செய்து  வருகின்றனர். இத்தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதுடன், நெசவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார். அவர் எஸ்.திருவேங்கிடாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அய்யனாபுரம், சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சொக்கலிங்காபுரம், மில் கிருஷ்ணாபுரம், கம்மாப்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.

அப்பகுதியில் ராஜவர்மன் எம்எல்ஏ பேசுகையில், இந்த பகுதியில் உள்ள பள்ளிகளின் தரம் உயர்த்த பாடுபடுவேன். வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு அமைத்து முக்கிய சாலை சந்திப்புகளில் உயர்மின் விளக்கு கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 அவருடன் அமமுக கட்சி நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தேமுதிக நகர, ஒன்றிய  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>