விருதுநகர் மாவட்டத்தில் அதிகரிக்கும் வெயில்

விருதுநகர், மார்ச் 25: விருதுநகர் மாவட்டத்தில் அதிகரிக்கும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கோடையின் தாக்கம் அதிகரித்து வருவதால் விருதுநகர் மாவட்டத்தில் சாலைகளில் வாகனப்போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. முதியவர்கள், குழந்தைகள் வெயிலின் கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோடை காலத்தில் பருத்தி ஆடைகளை அணியுமாறு டாக்டர் அறிவுறுத்தியுள்ளனர். மோர், இளநீர் போன்ற பானங்களை பருகுமாறும் பரிந்துரைத்துள்ளனர். வெயில் அதிகரித்து வருவதால் விருதுநகர் மாவட்டத்தில் இளநீர், தர்ப்பூசணி, கூழ் விற்பனை களைகட்டத் துவங்கியுள்ளது. விருதுநகரில் வெயில் சதமடிக்கும் நிலையில் உள்ளதால் வெப்பத்தின் அளவு கூடியுள்ளது.

Related Stories:

>