×

26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் திருப்பத்தூர் தொகுதிக்கு இரண்டு வாக்கு எந்திரம்

சிவகங்கை, மார்ச் 25: தமிழகம் முழுவதும் ஏப்.6ல் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இ.கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, அமமுக, மநீம, நாதக மற்றும் சுயேட்சைகள் உள்பட 15பேர் களத்தில் உள்ளனர்.
காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக கூட்டணியில் பிஜேபி, அமுமுக, மநீம, நாதக, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 13பேர் போட்டியிடுகின்றனர். திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 26 பேர் போட்டியிடுகின்றனர். மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 13 பேர் களத்தில் உள்ளனர். 15 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் ஒரு வாக்கு எந்திரம் பயன்படுத்தப்படும்.

ஒரு வாக்கு எந்திரத்தில் 16 சின்னங்கள் இருக்கும். முதல் 15பட்டன்கள் வேட்பாளர்களுக்கும், 16வது பட்டன் நோட்டாவுக்காகவும் ஒதுக்கப்படும். 16 மற்றும் அதற்கு மேல் வேட்பாளர்கள் இருக்கும் பட்சத்தில் இரண்டாவது வாக்கு எந்திரம் பயன்படுத்தப்படும். இதன்படி முதல் எந்திரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பதிவு பெற்ற அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் என்ற வரிசையில் 15வேட்பாளர்கள் பெயர்களும், சின்னங்களும் 16வது பட்டனில் நோட்டாவும் இருக்கும். இரண்டாவது வாக்கு எந்திரத்தில் 16வதாக உள்ள வேட்பாளர் பெயரில் இருந்து தொடர்ந்து வேட்பாளர் பெயர்கள், சின்னங்கள் இருக்கும். சிவகங்கை தொகுதியில் 15வேட்பாளர், காரைக்குடி தொகுதியில் 13வேட்பாளர், மானாமதுரை தொகுதியில் 13வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இந்த மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு வாக்கு எந்திரம் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது.

திருப்பத்தூர் தொகுதியில் 26வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் இந்த தொகுதியில் மட்டும் 2வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
 கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் 2வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. 64 வேட்பாளர்கள் வரை 4வாக்கு எந்திரம் பயன்படுத்தப்பட்டு தேர்தல் நடத்தப்படும். அதற்கு மேல் வேட்பாளர்கள் இருந்தால் வாக்கு எந்திரத்திற்கு பதில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும்.

Tags : Tirupati ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...