காரைக்குடியில் மகளிர் கலைக்கல்லூரி காங். வேட்பாளர் மாங்குடி உறுதி

காரைக்குடி, மார்ச் 25: காரைக்குடி அருகே இலுப்பகுடி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு, தெற்கு குடியிருப்பு, லட்சுமி நகர், மாத்தூர், கண்டனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மாங்குடி வாக்குகள் சேகரித்தார். பின்னர் அவர் பேசுகையில், காரைக்குடியில் மகளிர் கலைக்கல்லூரி, மேம்பாலம், தேவகோட்டை காரைக்குடி சுற்றுவட்ட சாலை, காரைக்குடியை மாநகராட்சியாக்குவது போன்ற அனைத்து திட்டங்களும் நிறைவேற திமுக தலைவர் முதல்வராகவேண்டும்.இங்குள்ள அரிசி சேமிப்பு கிடங்கால் லட்சுமி நகர் பகுதி மக்களுக்கு பல்வேறு பிரச்னை வருவதாக புகார் தெரிவித்துள்ளீர்கள். அது சரி செய்யக்கூடிய பிரச்னைதான். மக்களுக்கு இடையூறாக உள்ள எதையும் மாற்ற முடியும். திமுக தலைமையிலான அரசு அமைந்ததும் இதனை சரி செய்வேன் எனது உறுதியளிக்கிறேன்.

என்னை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து உங்களின் குறைகளை தெரிவிக்கலாம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி. மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார்.ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, இருப்பகுடி முன்னாள் ஊராட்சி தலைவர் அன்பரசு, திமுக நிர்வாகி ரகுபதி, சட்டபாதுகாப்பு குழு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர் சொக்கலிங்கம், சுப்பிரமணியன், கிளை செயலாளர் வைரவன், மாத்தூர் ஊராட்சி தலைவர் காமராஜ், காங்கிரஸ் கருப்பையா, மதிமுக பசும்பொன்மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>