ராமநாதபுரம், முதுகுளத்தூர் தொகுதிக்கு இரண்டு வாக்குப்பதிவு இயந்திரம்

ராமநாதபுரம், மார்ச் 25:  வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பால் ராமநாதபுரம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 2 வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது: பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 357 வாக்குச்சாவடி மையங்கள், திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 417 வாக்குச்சாவடி மையங்கள், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 431 வாக்குச்சாவடி மையங்கள், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 442 வாக்குச்சாவடி மையங்கள் என 1647 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 518 வாக்குச்செலுத்தும் கருவிகள், 518 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 561 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள்,  முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 531 வாக்குச்செலுத்தும் கருவிகள், 531 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 575 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் என முறையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.ஒரு மின்னணு வாக்குச் செலுத்தும் இயந்திரத்தில் 15 வேட்பாளர்கள், நோட்டா என 16 பட்டன்களில் மட்டுமே வேட்பாளர் பெயர், சின்னம் பதிவு செய்ய இயலும். பரமக்குடி தொகுதியில் 15, ராமநாதபுரம் தொகுதியில் 19, திருவாடானை தொகுதியில் 15, முதுகுளத்தூர் தொகுதியில் 23 என 72 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் முதுகுளத்தூர், ராமநாதபுரம் தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் தலா இரண்டு வாக்குச் செலுத்தும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதன்படி முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 531, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 518 என முறையே கூடுதல் வாக்குச் செலுத்தும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது என்றார்.

Related Stories:

>