தொழிலாளர்கள் உரிமைக்கான கூட்டமைப்பு தேர்தல் அறிக்கை

மதுரை, மார்ச் 25: தமிழ்நாடு தொழிலாளர்கள் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமையில் இயங்கி வரும் ஆதித்தமிழர் ஜனநாயக தொழிலாளர்கள் பொதுநலச்சங்க தலைவர் பிரியா, ஆதித்தமிழர் செயலாளர் அழகுராஜா ஆகியோர் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:   அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். பணியிடங்களில் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கி புகார் குழுக்களை அமைத்து, நடைமுறைப்படுத்த வேண்டும். கிராமப்புற ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்து, நிரந்தரமான வேலைகளில் தொழிலாளர்களை நிரந்தரமாக அமர்த்த வேண்டும். இதுவே எங்களது தேர்தல் அறிக்கை. இவ்வாறு கூறினர்.

Related Stories:

>