உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி

ஒட்டன்சத்திரம், மார்ச் 25: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தா.புதுக்கோட்டையில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் ஊரக தோட்டக்கலை பணி அனுபவ திட்டத்தின் கீழ் உதவி இயக்குனர் செல்வக்குமார், இணை பேராசிரியர் செல்லமுத்து, உதவி பேராசிரியர் செந்தில்ராஜா ஆகியோர் வழிகாட்டுதலின் படி நடைபெற்ற பேரணியை ஊராட்சிமன்ற தலைவர் காமாட்சியப்பன் துவக்கி வைத்தார். இப்பேரணியில் தண்ணீர் சேமிப்பதன் அவசியம் குறித்து கோசங்கள் எழுப்பி, விளம்பர பதாகைகளுடன் சென்றனர். இதில் மாணவர்கள் பிரவீன், பிரேம்குமார், ரஞ்சித்குமார், லெனின், சாம், சச்சிதானந்த், சம்பித்குமார் உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.

Related Stories:

>