வேப்பனஹள்ளி அருகே திருமணத்திற்கு சென்ற வாலிபருக்கு கத்திக்குத்து

வேப்பனஹள்ளி, மார்ச் 25:  வேப்பனஹள்ளி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கோவிந்தப்பன். இவரது மகன் சபரி(26), கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில், திருமணத்திற்கு செல்ல, சந்திரசேகர் என்பவரது வீடு உள்ள வழியாக சென்றுள்ளார். அப்போது சபரியை வழிமறித்த சந்திரசேகர், திருமணத்திற்கு செல்லக்கூடாது என்று கூறி தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில், சபரியை கீழே தள்ளிய சந்திரசேகர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சராமாரியாக குத்தியுள்ளார்.

இதில் சபரிக்கு தலை, கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடி வந்த சபரியின் நண்பர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில், வேப்பனஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரசேகரை தேடி வருகின்றனர்.

Related Stories: