ஆயுதப்படை டிஎஸ்பி பொறுப்பு ஏற்பு வேலூர் மாவட்ட

வேலூர், மார்ச் 25: வேலூர் மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பி ஜெயகரன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரியும் முக்கிய துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையை சேர்ந்தவர்களை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து வருகிறது. அதன்படி வேலூர் மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாக பணியாற்றி வந்த விநாயகம் சென்னை மாநகர ஆயுதப்படை டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதிலாக சென்னை அம்பத்தூர் போக்குவரத்துதுறை உதவி ஆணையராக பணியாற்றி வந்த ஜெயகரன், வேலூர் ஆயுதப்படை டிஎஸ்பியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் வேலூர் ஆயுதப்படை டிஎஸ்பியாக ஜெயகரன் நேற்றுமுன்தினம் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள், காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக எஸ்பி செல்வகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>