மரத்தடியில் அமர்ந்து வாக்கு சேகரித்த மரகதம் குமரவேல்

மதுராந்தகம், மார்ச் 24: மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தரப்படும் என அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், பொதுமக்களிடம் பேசினார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், மரத்தடியில் அமர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக மதுராந்தகம் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் முதுகரை கார்த்திகேயன், அதிமுக வேட்பாளரை பட்டாசு வெடித்து வரவேற்றார். கிராம மக்கள் ஆரத்தி எடுத்து, மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். சில இடங்களில் மரத்தடியில் அமர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர், மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள நேத்தபாக்கம், பையம்பாடி, பெருவேலி, தொன்னாடு, நீர்பெயர், சாலையூர், ஜமீன் புதூர், இரும்பேடு, சின்னவெண்மணி, இரும்பேடு, நல்லூர், ஒழவெட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் கிராம பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

கிராம பகுதிகளில் வேட்பாளர் மரகதம் குமாரவேல் பேசுகையில், ‘இரவு நேர பாடசாலை, பஸ் வசதி, குடிநீர் குளத்தை தூர்வாரி சீரமைத்து சுற்றுச்சுவர் கட்டுதல், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் உள்பட அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவேன் என உறுதியளித்தார்.  அவருடன், அதிமுக மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம், பாமக மாவட்ட செயலாளர் ஆத்தூர் வா.கோபாலகண்ணன், மாவட்ட துணை செயலாளர் முதுகரை ம.சங்கர், மாவட்ட தலைவர் ஏ.ஜி.குணசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் புதூர் தனுசு, தெற்கு ஒன்றிய செயலாளர் சிவலிங்கம், நிர்வாகிகள் பலராமன், ஆதிகேசவன், தம்பிஏழுமலை, மாநில மாணவரணி செயலாளர் சத்ரியன் சதீஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories:

>