மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி: திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் சூளுரை

செங்கல்பட்டு,  மார்ச் 24:  செங்கல்பட்டு தொகுதி திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் பாலூர், வில்லியம்பாக்கம், ஆத்தூர், திம்மாவரம், ரெட்டிபாளையம், கொளத்தூர், குருவன்மேடு, பழவேலி,  வெங்கடாபுரம், கரும்பாக்கம், கொளத்தாஞ்சேரி, கொங்கனாஞ்சேரி, மேலச்சேரி, தேவனூர் ஆகிய கிராமங்களுக்கு திறந்த ஜீப்பில், திமுக ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி தலைமையில், கூட்டணி கட்சியினருடன் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். மேலும், திமுக தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம்  வழங்கி, வாக்கு சேகரித்தார். அவரை, நூற்றுக்கணக்கான  பெண்கள், பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, பட்டாசு வெடித்து  வரவேற்றனர். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி. அதன்பிறகு, செங்கல்பட்டு தொகுதியின் பிரசனைகள் அனைத்தும் முழுமையாக தீர்க்கப்படும். பாலாற்றை ஒட்டியுள்ள இந்த பகுதிகளில் விவசாயம் அதிகளவில் செய்யப்படுகிறது. விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் வில்லியம்பாக்கம் பாலூர் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.

குருவன்மேடு பகுதியில் வெள்ள அபாயத்தை தடுக்க மேம்பாலம் அமைக்கப்படும். தெள்ளிமேடு பாலூர் சாலை சீரமைக்கப்படும். அனைத்து பகுதிகளிலும் ரேஷன்கடை, அங்கன்வாடி மையம் கட்டிதரப்படும். சாஸ்திரம்பாக்கம் சாலை தார் சாலையாக மாற்றப்படும். திம்மாவரம் மகாலட்சுமி நகரில் மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில்,   கான்கிரீட் சுவர் அமைக்கப்படும். பூங்காக்கள் சீரமைக்கப்படும்.  விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் பொருட்களை நியாயமான விலைக்கு விற்பனை செய்ய, அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். திமுக ஆட்சி அமைந்தவுடன், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் செங்கல்பட்டு தொகுதி மக்களுக்கு பெற்றுத்தரப்படும்  என்றார்.

இதில் பாலூர் திமுக நிர்வாகிகள் முத்துகுமாரசாமி, பவுல், ஆத்துர் நிர்வாகிகள் பிரபாகரன், சுந்தரி சுப்பிரமணியன், ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர் அறிவழகன் மூர்த்தி, வில்லியம்பாக்கம் நிர்வாகிகள் சி.வரதன், டி.அசோக்குமார், திம்மாவரம் நிர்வாகிகள் அருள்தேவி, மணி, புவனேஷ்வரி, பத்மாவதி, வெங்கடாபுரம் நிர்வாகிகள் தெய்வானை, தர்மன், கொளத்தூர் நிர்வாகிகள் சண்முகம், கோதை கண்ணன், பழவேலி நிர்வாகி பிரதீப், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ராஜராஜன், குருவன்மேடு வேல்முருகன், ரெட்டிபாளையம் செந்தில்,  செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ஆர்.சுந்தரமூர்த்தி, வட்டார தலைவர் பவுல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் தென்னவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகி சண்முகம், திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய நிர்வாகிகள் ஆப்பூர் சந்தானம், வி.ஜி.திருமலை, சிங்கபெருமாள்கோயில் கே.பி.ராஜன், சதீஷ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மதிமுக உள்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>