வெள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நவீன மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை

திருவள்ளூர், மார்ச் 24: பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி நேற்று திருவள்ளூர் ஒன்றியத்தில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன் தலைமையில் கிராமம், கிராமமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, “வெள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நவீன மருத்துவமனையாக மாற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன். ஏற்கனவே வெளியூரில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சமுதாய கூடம் கட்டப்பட்டு வருகிறது. திருவள்ளூர் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளேன். பழுதடைந்த பள்ளி கட்டடங்களை சீரமைத்து கொடுத்துள்ளேன். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் புதிய தார் சாலைகள் ஆழ்துளை கிணறுகள் அமைத்துக் கொடுத்துள்ளேன்,”

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த வாக்குசேகரிப்பில் காங்கிரஸ் நிர்வாகிகள் சதாபாஸ்கரன், டாக்டர் வெங்கடேசன், ரமேஷ், விசிக நிர்வாகிகள் தளபதி சுந்தர், ஒரகடம் குமணன், வெங்கடேசன், ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், துணை பெருந்தலைவர் எம்.பார்க்கத்துல்லாகான், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா சீனிவாசன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பா.நரேஷ்குமார், ஈக்காடு கே.முகமதுரபி, மூர்த்தி, பிகேஇ.நாகராஜ், ஒன்றிய நிர்வாகிகள் வி.என்.சிற்றரசு, எஸ்.ஜெயபாலன், கே.தரணி, மதுரைவீரன், விமலாகுமார், பி.ராமானுஜம், டி.தென்னவன், பிகேஇ.கபிலன் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள், பிரதிநிதிகள், முன்னோடிகள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>