×

பள்ளிப்பட்டு - ஆர்.கே.பேட்டை பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும்

பள்ளிப்பட்டு, மார்ச் 24: திருத்தணி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் திருத்தணி எஸ்.சந்திரனை ஆதரித்து மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தலைமையில் அம்மையார்குப்பம், ஆதிவராகபுரம், அம்மனேரி, கொண்டாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் மகள் நிஷா ஜெகத்ரட்சகன் நேற்று வீதி வீதியாகச் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு அங்கிருந்த பெண்கள் ஆர்த்தி எடுத்து, உற்சாகமாக வரவேற்றனர். பிரசார கூட்டத்தில் திமுக வேட்பாளர் திருத்தணி எஸ்.சந்திரன்  பேசியதாவது, “கிராம பகுதிகள் நிறைந்த திருத்தணி சட்டமன்ற தொகுதி உள்ளடக்கிய பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை பகுதிகளை சேர்ந்த படித்த வேலையில்லா இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பள்ளிப்பட்டு மையமாக கொண்டு புதிய சிப்காட்  தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முருகனின் ஐந்தாம் படைவீடாக போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைக்கப்படும். நெசவாளர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஏதுவாக நெசவாளர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

மேலும், நிஷா ஜெகத்ரட்சகன் பேசியதாவது, “எனது தந்தை ஜெகத்ரட்சகன் மீது இத்தொகுதி மக்கள் காட்டும் அன்பை போல் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ்.சந்திரனுக்கும் அனைத்து தரப்பு மக்களும் அன்பை காட்டி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும்,” என்றார். இதில், கல்வியாளர் காமராஜர், ஒன்றிய செயலாளர்கள் சி.என்.சண்முகம், பி.பழனி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மா.ரகு, ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன், நிர்வாகிகள் கே.எம்.சுப்பிரமணியசுவாமி, எஸ்.ஆர்.ரவி, சி.எம்.ரவி, சி.மேகநாதன், வி.ஜி.மோகன்,ராமசாமி, சுகுணா மூர்த்தி ரமேஷ், சீனிவாசன், பி.கே.கோவிந்தசாமி, தியாகராஜன், சிங்காரம், சுந்தரம், ஏ.கே.மணி, சண்முகம், ஏகவல்வி பழனி, நடேசன், காங்கிரஸ் நிர்வாகிகள் கே.எஸ்.சரவணன், மதிவாணன், திருநாவுக்கரசு, கணபதி, ஜெகதீசன், துளசி, மதிமுக நிர்வாகிகள்  புருஷோத்தமன், கோபி, சி.பி.எம். நிர்வாகிகள் கே.ஜி.கணேசன், என்.ஜி.வேலு, திருச்சிற்றம்பலம், விநாயகம், சி.பி.ஐ. ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Pallipattu - Chipkot ,RKpet ,
× RELATED மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு...