×

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு: அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வண்ணாரப்பேட்டை 53வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பெண்கள் ஆரத்தி  எடுத்தும், பட்டாசு வெடித்தும் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.அப்போது அவர் பொதுமக்களிடையை பேசுகையில், ‘கடந்த 1991ம் ஆண்டிற்கு முன்பு வரை ராயபுரத்தில் போக்குவரத்து நெரிசல் இருந்த நிலையில், சுற்றுவட்ட மேம்பாலம், மின்ட் பாலம், ஸ்டான்லி சுரங்கப்பாதை என்று பல பாலங்கள்  அமைத்ததன் மூலம் நெரிசல் வெகுவாக குறைந்துள்ளது.

போஜராஜன் நகரில் நடைபெறும் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் விரைவில் முடிக்கப்படும். இதன்மூலம் ராயபுரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதியாக மாறும். இந்த  சுரங்கப்பாதை பணி நடைபெறுமா என அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த நேரம், நான் கண்டிப்பாக சுரங்கப்பாதை வரும் என்று கூறி அதற்காக தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டதன் பலனாக தற்போது ரயில்வே தரப்பு பணிகள் முடிந்து,  சென்னை மாநகராட்சி பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. 3 முறை ஏற்பட்ட ஏற்பட்ட புயல் மழையால் சுரங்கப்பாதை பணி தாமதமானாலும், இன்னும் 10 மாதங்களில் மீதமுள்ள பணிகள் நிறைவுற்று, வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சுரங்கப்பாதை செயல்பாட்டிற்கு வரும். இதனால், போஜராஜன்  நகர், சினிவாசபுரத்தை சேர்ந்த மக்கள் பயனடைவார்கள்,’ என்றார்.

Tags : Minister Jayakumar ,
× RELATED மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அளித்த...