×

செம்பாக்கம்-சேலையூர் இடையே மேம்பாலம்: டி.கே.எம்.சின்னையா வாக்குறுதி

சென்னை: தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா செம்பாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது அவர்  பேசுகையில், ‘அமைச்சராக இருந்தபோது முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்லி பேரூராட்சியாக இருந்த செம்பாக்கம், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா உணவகம், புதிய பூங்காக்கள்,  சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அனைத்து வீடுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பு பெற்று தருவேன். செம்பாக்கம் நகராட்சி பகுதி முழுவதும் பாதாள சாக்கடை அமைக்கப்படும். வேலைக்கு செல்லும் செம்பாக்கம் மக்களுக்கு முக்கிய பிரச்னையாக இருக்கக்கூடிய  கேம்ப்ரோடு-சேலையூர் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க செம்பாக்கம்-சேலையூர் இணைப்பு மேம்பாலம் அமைக்கப்படும்,’ என்றார்.

பிரசாரத்தின்போது செங்கல்பட்டு மாவட்ட பாஜக பொறுப்பாளர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியன், நகர மன்ற முன்னாள் தலைவர் சாந்தகுமார், நகர அதிமுக செயலாளர் விஜயராகவன், நகர துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள்  உறுப்பினர் அய்யனார், வேலு, ஆரோக்கியராணி, லோகேஷ் அதிமுக நிர்வாகிகள் பாப்பாத்தி, விஜயகுமார், பாஜக செம்பாக்கம் நகர தலைவர் நாகராஜன், பாலசுப்பிரமணியம், நந்தகுமார், செல்வராஜ், ஆறுமுகம், வசந்தி, சாருமதி, லதா, பாமக  மாவட்ட தலைவர் விநாயகம், புரட்சி பாரதம் கேட் சேகர் உள்பட பலர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags : Chembakkam ,Saleiyoor ,
× RELATED சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை;...