திருப்பரங்குன்றம் தொகுதியில் கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு தறிக்கூடம் அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பா உறுதி

திருப்பரங்குன்றம், மார்ச் 24: திருப்பரங்குன்றம் தொகுதியில் நெசவாளர்களுக்கு அரசு தறிக்கூடம் ஏற்படுத்தி தருவேன் என அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா வாக்குறுதியளித்தார். மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ராஜன் ெசல்லப்பா எம்எல்ஏ போட்டியிடுகிறார். இவர் திருப்பரங்குன்றம் தொகுதி மக்களிடம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இவர் தொகுதிக்குட்பட்ட கைத்தறி நகர், நிலையூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு தறிக்கூடம் ஏற்படுத்தி தருவேன். நூல் பாவுகளுக்கு மானியம் பெற்று தருவேன்’ என்றார். பின்னர் ராஜன்செல்லப்பா, அப்பகுதியில் உள்ள ஒரு நெசவாளரின் வீட்டில் உள்ள கைத்தறி கூடத்தில் அமர்ந்து சிறிதுநேரம் நெசவு நெய்தார். பிரசாரத்தின்போது மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories:

>