கல்லிடைக்குறிச்சியில் பள்ளிவாசல் திறப்புவிழா

அம்பை, மார்ச் 24: கல்லிடைக்குறிச்சி சின்னப்பள்ளிவாசல் தெருவில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் திறப்புவிழா  நடந்தது. இதையொட்டி  மதரசா மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் மதி மாலிக்  தலைமை வகித்தார்.  கல்லிடை நகர உலமாக்கள் முன்னிலை வகித்தனர், ராபியத்துல் பஸரியா கிராத் ஓதினார். பள்ளிவாசல் இமாம் முகம்மது இத்ரீஸ் வரவேற்றார்.  பெரிய பள்ளி இமாம் தமீமுல் அன்சாரி வாழ்த்திப் பேசினார். 2ம் அமர்வாக நடந்த திறப்பு விழாவிற்கு கட்டிடக்குழு தலைவர் அசரப் உசேன் தலைமை வகித்தார், இறை இல்லத்தை சமூக ஆர்வலர் முகமதுமைதீன் திறந்து வைத்தார. ஜமாத் தலைவர்கள் மதிமாலிக், நாகூர்மைதீன், அப்துல்காதர், அப்துல் மஜீத், ரசூல் மைதீன் முன்னிலை  வகித்தனர். முகமது கமால் வரவேற்றார்.

அப்துல் மஜீது, திவான் ஒலி வாழ்த்திப் பேசினர்.  ஒளி மாலிக் திட்ட அறிக்கை வாசித்தார். ஆசிரியர் உமர்பாரூக் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். டாக்டர்கள் ஞானசேகரன், குமார், ஓய்வுபெற்ற ஆசிரியர் அடைக்கலம், திலகர் வித்யாலயா தலைமை ஆசிரியர்  பண்டாரசிவன், மேப்பாளையம் உஸ்மானியா அரபிக்கல்லூரி முதல்வர் ஹைதர் அலி  சிறப்புரையாற்றினர். இதில் அம்பை தொகுதி திமுக வேட்பாளர் ஆவுடையப்பனின் மகனும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பிரபாகரன், அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா மற்றும் இஸ்லாமியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சின்னப்பள்ளிவாசல், நிர்வாகத்தினரும், இளைஞர் அணியினரும் செய்திருந்தனர்.

Related Stories:

>