திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு காமராஜர்ஆதித்தனார் கழகம் ஆதரவு

உடன்குடி,மார்ச் 24: காமராஜர் ஆதித்தனார் கழக நிர்வாகிகள் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து தங்கள் ஆதரவு தெரிவித்தனர். திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் அனிதா ராதாகிருஷ்ணனை தண்டுபத்து மாவட்ட தலைமை அலுவலகத்தில் சந்தித்து காமராஜர் ஆதித்தனார் கழக மாநில பொதுச்செயலாளர் மின்னல் அந்தோணி தங்களது முழு ஆதரவை தெரிவித்தார்.

அப்போது சென்னை மண்டல தலைவர் பால்பாண்டியன், மாநில தேர்தல் பொறுப்பாளர் பிரதீப் கணேசன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜஜின்குமார், மாநில தொழிற்சங்க தலைவர் பழனி, மாநில மீனவர்அணிச் செயலாளர் தினேஷ், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் பாலமுருகன், திருவள்ளுர் மாவட்டச் செயலாளர் பெலிக்ஸ்துரை, மாநில அரசியல் ஆலோசனை குழு தலைவர் ஆனந்தி செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் மீனாட்சிசுந்தரம், தூத்துக்குடி மாநகர செயலாளர் சிவக்குமார், மாநகர துணைச் செயலாளர் அரவிந்தராஜா, உடன்குடி ஒன்றிய செயலாளர் செல்வம், உடன்குடி நகர செயலாளர் ராகுல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து மாநில பொதுச் செயலாளர் மின்னல் அந்தோணி கூறுகையில் ‘வரும் சட்ட மன்ற தேர்தலில் திருச்செந்தூர் ெதாகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் அனிதாராதாகிருஷ்ணன் வெற்றிக்கு காமராஜர் ஆதித்தனார் கழக நிர்வாகிகள் அனைவரும் பாடுபடவுள்ளோம். இன்று முதல் வீடு, வீடாகச் சென்று எங்களது தேர்தல் பணியை துவங்க இருக்கிறோம். பனைத் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் நாடார் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, கருப்பு கட்டிக்கு புவிசார் குறியீடு உட்பட பல கோரிக்கைகள் வைத்துள்ளோம்’ என்றார்.

Related Stories:

>