×

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் தூத்துக்குடி மக்களின் வரிப்பணம் வீணடிப்பு திமுக வேட்பாளர் கீதாஜீவன் குற்றச்சாட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருவதாக திமுக வேட்பாளர் கீதாஜீவன் குற்றம் சாட்டினார். தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கீதாஜீவன் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று அவர் தூத்துக்குடி சிவன் கோயில் தேரடி முன்பிருந்து தனது பிரசாரத்தை துவக்கி செல்வீஜர் தெரு, தெப்பக்குளம் தெரு, கனகசபாபதி தெரு, வ.உ.சிமார்க்கெட், டிஆர் நாயுடு தெரு, ஜெயலாணிதெரு, மீக.தெரு, தெற்கு புதுத் தெரு, அந்தோணியார் கோவில்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசுகையில், ‘சினிமாவில் மார்க்கெட் போன பின்பு அரசியலுக்கு வந்த ராதிகா வீரவசனம் பேசுகிறார். இவ்வளவு நாட்கள் எதையும் பற்றி சிந்திக்காத நடிகர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வீரவசனம் பேசுவதை விட்டு மக்கள் பணி செய்ய வேண்டும்.

நான் சட்டமன்றத்தில் பேசி பெற்று கொடுத்த நிதியை மாநகராட்சி நிர்வாகம் முறையாக செயல்படுத்தவில்லை. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் தேவையில்லாத திட்டங்களை கமிஷனுக்காக செயல்படுத்தி மக்களின் வரிப்பணத்தை வீணடித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் எம்மதமும் எங்களுக்கு சம்மதம் என்று செயல்பட்டு வருகிறார். அவர் வழியில் மக்கள் பணியாற்ற எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார். பிரசாரத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அணி செயலாளர்கள் அன்பழகன், ரமேஷ், அந்தோணிஸ்டாலின், துணைச்செயலாளர்கள் சேசையா,  பாலகுருசாமி, மாநகர அணி அமைப்பாளர்கள் ஆனந்தகபரியேல்ராஜ், அருண்குமார், துணை அமைப்பாளர்கள் அருண்சுந்தர், கிறிஸ்டோபர் பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன்,

நிர்மல்ராஜ், ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், கதிரேசன்,  முன்னாள் கவுன்சிலர்கள் அந்தோணிராஜ், செந்தில்குமார், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஏபிசிவி.சண்முகம், மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, சந்திரபோஸ், அருள், நிர்வாகிகள் குமாரமுருகேசன், நடேஷ்குமார், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, நிர்வாகிகள் பேச்சிராஜ், தொம்மை, விநாயகமூர்த்தி, மகாராஜன்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் மீராசா, தமிழ்நாடு முஸ்ஸீம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ஹசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Geethajeevan ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி