×

உடுமலை, மடத்துக்குளம் தொகுதி வேட்பாளர்களின் சின்னம் வெளியீடு

உடுமலை மார்ச் 24: உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம் அறிவிக்கப்பட்டது. உடுமலை,மடத்துக்குளம்  தொகுதிகளில் தலா  15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களின் சின்னம் அறிவிக்கப்பட்டது. உடுமலை தொகுதியில் போட்டியிடும் குமார்(பகுஜன் சமாஜ் கட்சி) யானை சின்னமும்,தென்னரசு  (காங்கிரஸ்) கை சின்னமும், ராதாகிருஷ்ணன்  (அதிமுக) இரட்டைஇலை  சின்னமும், கிருஷ்ணன்  (அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்) பலாப்பழம்  சின்னமும், நாச்சம்மாள்(அனைத்து மக்கள் அரசியல் கட்சி) சமையல்  எரிவாயு சிலிண்டர் சின்னமும், பழனிச்சாமி(அமமுக)குக்கர் சின்னமும், பாபு ராஜேந்திர பிரசாத்  (நாம் தமிழர்) கரும்பு விவசாயி சின்னமும், ஸ்ரீ நிதி(மக்கள் நீதி மய்யம்) டார்ச் லைட்  சின்னமும் ஒதுக்கப்பட்டு உள்ளது. சுயேட்சையாக  களம் இறங்கிய அசோக்குமார் -டிரக் சின்னத்திலும்,ஆறு முகம்-டிரிலங் மெஷின்  சின்னத்திலும், உமர்அலி ஆட்டோ சின்னத்திலும்,எல்சி-மின் கம்பம் சின்னத்திலும்,கார்த்திகேயன்- கிரிக்கெட் மட்டை  சின்னத்திலும்,திவ்யா- தென்னந்தோப்பு  சின்னத்திலும்,ரஜினி- டிராக்டர் சின்னத்திலும் போட்டியிட உள்ளனர்.இதே போல மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் சின்னம் விவரங்கள் வரும் மாறு:பெஞ்சமின் கிருபாகரன் (பகுஜன் சமாஜ் கட்சி) யானை சின்னத்திலும், மகேந்திரன் (அதிமுக) இரட்டை இலை சின்னத்திலும், ஜெய ராமகிருஷ்ணன்(திமுக) உதய சூரியன் சின்னத்திலும், குமரேசன் ( மக்கள் நீதி மய்யம்) டார்ச் லைட் சின்னத்திலும், சக்திவேல் சக்திவேல் (அண்ணா எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா முன்னேற்றக் கழகம்) பலாப்பழம் சின்னத்திலும், சண்முகவேலு (அமமுக) குக்கர் சின்னத்திலும், சனுஜா (நாம் தமிழர் கட்சி) கரும்பு விவசாயி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். சுயேச்சைகளாகிய சண்முகவேல் கிப்ட் பாக்ஸ் சின்னத்திலும், சுப்பிரமணியன் கடாய் சின்னத்திலும், தங்கராஜ் டிரக் சின்னத்திலும், மகாலிங்கம் தொலைக்காட்சிப்பெட்டி சின்னத்திலும், மகேந்திர குமார் பட்டாணி சின்னத்திலும், மகேந்திரன் மகளிர் கைப்பை சின்னத்திலும், மாணிக்க சாமி உழவு கருவி சின்னத்திலும், ராமகிருஷ்ணன் ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

Tags : Udumalai ,Madathukulam ,
× RELATED வண்ண ஓவியங்களால் ஜொலிக்கும் உடுமலை மத்திய பேருந்து நிலையம்